பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம்

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி உண்ணாவிரதம் நடந்தது.

Update: 2023-05-19 20:12 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தை சேர்ந்தவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முத்துச்சாமி போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளர் நீலகண்டன் உள்பட பலர் கருத்துரை வழங்கினர். ராஜஸ்தான், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் மற்றும் இமாச்சலபிரதேசத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், தி.மு.க. சட்டமன்ற தேர்தல் கால வாக்குறுதிபடி தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட காலத்தில் இறந்த, ஓய்வுபெற்ற அரசு ஊழியர், ஆசிரியர் குடும்பத்தினருக்கு பணிக்கொடை வழங்கக்கோரியும் இந்த உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்