உழவுப்பணியை தொடங்கிய விவசாயிகள்
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் உழவுப்பணியை தொடங்கினர்
எஸ்.புதூர்
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழையை தொடர்ந்து விவசாயிகள் உழவுப்பணியை தொடங்கியுள்ளனர். இதற்காக வயல்வெளிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். விவசாயிகள் டிராக்டர் ெகாண்டு நிலத்தை உழவு செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர். மழை தொடர்ந்து பெய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர். ஓரிரு நாட்களில் நடவு பணியை தொடங்க உள்ளனர்.