வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிவு செய்து விவசாயிகள் நலத்திட்ட உதவி பெறலாம்-மாவட்ட நிர்வாகம் தகவல்

ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள வேளாண் அடுக்ககம் திட்டத்தி்ல் விவசாயிகள் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2023-03-17 18:45 GMT


ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள வேளாண் அடுக்ககம் திட்டத்தி்ல் விவசாயிகள் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

இணையதளம்

வேளாண் அடுக்ககம் திட்டம் வரும் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களது விவரங்களை கிரெய்ன்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துகொள்ள வேண்டும். வேளாண் அடுக்ககம் திட்டத்தின் மூலம் அனைத்து சாகுபடி நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் விவரம், நில உடமைவாரியாக புவியியல் குறியீடுசெய்தல் மற்றும் நிலஉடைமை வாரியாக பயிர் சாகுபடி விவரம் ஆகிய அடிப்படை விவரங்களை கொண்டு கிரெய்ன்ஸ் என்ற புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில் விவசாயிகள் பெரிதும் பயனடையும் வகையில் செயலாற்றும் வருவாய், வேளாண் துறை, பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு, பட்டுவளர்ச்சி, உணவு வழங்கல், கால்நடைபராமரிப்பு உள்பட 13 துறைகள் இணைக்கப்பட உள்ளது.

நலத்திட்ட உதவிகள்

இத்திட்டத்தின் மூலம் அரசு வழங்கும் நலத்திட்டங்கள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதி செய்யமுடியும். ஒற்றைசாளர இணையதளமாக செயல்படுவதால் ஒரே இடத்தில் பதிவுசெய்வதன் மூலம் அனைத்து துறைகளிலும் விவசாயிகள் அரசின் நலதிட்டஉதவிகளை பெற்றுக் கொள்ளமுடியும். இதுவரை பெற்ற நலத்திட்ட உதவிகளை நேரடியாக தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு முறையும் பயன்பெற விண்ணப்பிக்கும் போதும் விவசாயிகள் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விவசாயிகள் நேரடியாக இணையதளத்தில் விவரங்களை பதிவேற்றம் செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்களை பெறமுடியும். மேலும் நிதிசார்ந்த நலத்திட்ட பலன்கள் ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படும்.

ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள வேளாண் அடுக்ககம் திட்டத்தி்ல் விவசாயிகள் பதிவு செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம் என்று மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களது ஆதார் கார்டு நகல், புகைப்படம், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் நிலப்பட்டா ஆவண நகல் ஆகியவற்றை சம்பந்தப்பட்ட வி.ஏ.ஓ. அல்லது உதவி வேளாண்மை அலுவலர் அல்லது உதவி தோட்டக்கலை அலுவலரிடம் ஒப்படைத்து, கிரெய்ன்ஸ் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டதை உறுதி செய்து, அரசின் நலத்திட்டங்களை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்