குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2022-12-27 18:45 GMT

பொங்கல் பரிசுடன் கரும்பு வழங்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் வட்டார அளவிலானவிவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் (பொறுப்பு) மதியழகன் தலைமை தாங்கினார். வேதாரண்யம் தாசில்தார் ஜெயசீலன், தனிபிரிவு தாசில்தார் ரமேஷ் வேதையன், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் ரவி,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பக்கிரிசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள்,விவசாயிகள் கலந்து கொண்டு வடிகால் வாய்க்காலில் மண்டிக்கிடக்கும் ஆகாயதாமரை செடிகளை அகற்றி தூர்வார வேண்டும்.

விவசாயிகள் வெளிநடப்பு

பொங்கல் கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும். முல்லைப்பூக்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

பின்னர் பொங்கல் பரிசுடன் கரும்பை சேர்த்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி குறைதீர்க்கும் கூட்டத்தில் இருந்து ஒரு சில விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் வெளியே சென்று கோஷங்கள் எழுப்பினர்.

நடவடிக்கை

விவசாயிகளின் குறைகள் அனைத்தும் சம்பந்தப்ட்ட துறைகள் மூலம் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் மதியழகன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்