விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம்

விவசாய சங்கத்தினர் பட்ஜெட் நகலை எரித்து போராட்டம் நடத்தினர்.

Update: 2023-02-11 18:07 GMT

புதுக்கோட்டை விவசாய சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சார்பில், பா.ஜ.க. அரசின் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே பட்ஜெட் நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார். போராட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராமையன், தலைவர் பொன்னுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்