விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-18 18:23 GMT

தரகம்பட்டியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நிர்வாகி ரவி கண்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் வேல்முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய சங்க மாவட்ட செயலாளர் நாட்ராயன், மாவட்ட தலைவர் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கடவூர் ஒன்றியம் முழுவதும் உள்ள ஏரி, குளங்களுக்கு காவிரியில் இருந்து பம்பிங் முறையில் குழாய்கள் மூலம் நீர் நிரப்ப வேண்டும், வையம்பட்டி காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் சரியாக குடிநீர் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில், விவசாய சங்கம், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்