விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Update: 2022-10-22 20:26 GMT

திருக்காட்டுப்பள்ளி கடைவீதியில் உள்ள காந்தி சிலை எதிரில் பூதலூர் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் குறுவை நெல்லுக்கான ஈரப்பத அளவை அளவை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும். 2021 -22-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு இழப்பீடு தொகையை முறையாக வழங்கக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பூதலூர் வடக்கு ஒன்றிய தமிழ்நாடு விவசாய சங்க தலைவர் காந்தி தலைமை தாங்கினார். இதில் பூதலூர் ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ரமேஷ் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதேபோல் பூதலூர் நான்கு சாலை சந்திப்பில் பூதலூர் ஒன்றிய தலைவர் கெங்கைபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதேபோல் திருவையாறு பகுதியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Tags:    

மேலும் செய்திகள்