திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய விவசாயிகள் சங்க மாநாடு

திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய விவசாயிகள் சங்க மாநாடு நடந்தது.

Update: 2022-12-18 18:45 GMT

திருவெண்ணெய்நல்லூர், 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய மாநாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு ஜெயரட்சகன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில செயலாளர் மாசிலாமணி சிறப்புரையாற்றினார். அனைத்திந்திய இளைஞர் பெரு மன்ற மாவட்ட செயலாளர் மணிகண்டன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டு தீர்மானங்களை மாவட்டத் தலைவர் சகாபுதீன் விளக்கிப் பேசினார். இதில் மாவட்ட குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவில் வேளாண் கல்லூரி அமைக்கவேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இடம் தேர்வு செய்து புதிய கட்டிடத்தை கட்டி கொடுக்கவேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்துவதோடு, ஏனாதிமங்கலம் எல்லிஸ் சத்திரம் தடுப்பணையை போதுமான நிதி ஒதுக்கி போர்க்கால அடிப்படையில் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்