விவசாயிகள் போராட்டம்

விவசாய களத்தில் மருந்து கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்

Update: 2022-12-14 18:45 GMT

மயிலாடுதுறை அருகே திருவிழந்தூர் ஊராட்சி வேப்பங்குளம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அப்பகுதி விவசாயிகளின் வசதிக்காக அறுவடை செய்யும் நெல்லை அடிப்பதற்காக களம் அமைக்கப்பட்டு அதனை விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் அந்த களத்தில் மருந்துகிடக்கு வரப்போவதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் கடந்த அக்டோபர் மாதம் தெரிவித்துள்ளனர். இதனால் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறி மருந்துகிடங்கு அப்பகுதியில் அமைக்கக்கூடாது என்று வேப்பங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்திருந்தனர். இந்தநிலையில் நேற்று நிலஅளவையர்கள் மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள களத்தினை அளவீடு செய்ய வருவதை அறிந்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிகாரிகள் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்