பருத்தி ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும்

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என நாகை விற்பனை குழு அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Update: 2022-06-05 17:18 GMT

பொறையாறு:

ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடைபெறும் பருத்தி ஏலத்தில் விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் என நாகை விற்பனை குழு அலுவலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஒழுங்குமுறை விற்பனை கூடம்

நாகை விற்பனை குழு செயலாளர் ரமேஷ் மற்றும் தனி அலுவலர் சங்கர நாராயணன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற உள்ளது.இந்த ஆண்டு விவசாயிகள் செம்பனார்கோவில், பரசலூர், ஆக்கூர், திருக்கடையூர், மேமாத்தூர், கீழ்மாத்தூர், ஈச்சங்குடி, காளகஸ்திநாதபுரம், விசலூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், நல்லாடை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதியில் அதிக அளவில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.

பருத்தி ஏலம்

விவசாயிகளின் நலன் கருதி செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் பிரதி வாரம் திங்கட்கிழமை காலை 11 மணிக்கும், சீர்காழி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மாலை 4 மணிக்கும், குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிரதி வாரம் வியாழக்கிழமை மாலை 4 மணிக்கும் பருத்தி ஏலம் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் பல்வேறு மாவட்ட, மாநிலங்களில் இருந்து பருத்தி மில் அதிபர்களும், வணிகர்களும், வியாபாரிகளும் கலந்து கொண்டு பருத்தியை ஏலம் எடுக்க உள்ளனர். இதனால் விவசாயிகள் தங்களின் விளை பொருளான பருத்தியை கொண்டு வந்து மறைமுக ஏலத்தில் கலந்து கொண்டு நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்