வேளாண் அறிவியல் மையம் அமைக்கப்படுமா? - விவசாயிகள்

மத்திய அரசின் நிதி உதவியுடன் பட்டுக்கோட்டையில் வேளாண் அறிவியல் மையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Update: 2023-03-23 20:04 GMT

மத்திய அரசின் நிதி உதவியுடன் பட்டுக்கோட்டையில் வேளாண் அறிவியல் மையம் அமைக்கப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

வேளாண் அறிவியல் மையம்

மத்திய அரசு நிதி உதவியுடன் வேளாண் அறிவியல் மையம் திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளுக்கான பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வு காண்பது, பயிர்களில் பூச்சி தாக்குதலை தடுப்பதற்கு விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது உள்பட விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்வது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆனால் தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை அறிவியல் மையம் அமைக்கப்படாதது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர்

மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்படும் வேளாண் அறிவியல் மையத்தை தஞ்சை மாவட்டத்தில் அமைப்பதற்கு தமிழக அரசு நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பட்டுக்கோட்டையில் உள்ள வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் அல்லது பட்டுக்கோட்டை அருகே வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் இந்த வேளாண்மை அறிவியல் மையம் அமைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

எனவே தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் வேளாண் அறிவியல் மையம் அமைக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு இந்த பட்ஜெட் கூட்டம் மூலமாக வலியுறுத்த வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்