விவசாயிகள் குறைத்தீர்வு முகாம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைத்தீர்வு முகாம் நாளை நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. முகாமில் மாவட்ட அலுவலர்கள், விவசாயிகளிடம் குறைகளை நேரடியாக கேட்டறிந்து தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முகாமில் வட்டார அளவிலான அலுவலர்கள் கலந்துகொள்வார்கள்.
அதுசமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டு வழங்கப்படும் என கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.