விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்

விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என தாசில்தார் கூறினார்.

Update: 2023-04-19 21:24 GMT

பேராவூரணி;

பேராவூரணி தாசில்தார் சுகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாடு அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில், தமிழ்நாடு அரசின் அனைத்து திட்ட பயன்களையும் ஒற்றைச் சாளர முறையில் விவசாயிகள் பெற வேளாண் அடுக்குத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் தங்களது ஆதார் அட்டை நகல், ஸ்மார்ட் கார்டு நகல், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்கு புத்தக நகல், பட்டா நகல், விவசாயிகளின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைப்பேசி எண் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகி பதிவு செய்து பயன்பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்