நடுவிற்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நடுவிற்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2022-06-21 15:03 GMT

எட்டயபுரம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எட்டயபுரம் தாலுகா குழு சார்பில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி நடுவிற்பட்டி பட்டத்து விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். சங்க மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் பயிர் கடன் ரூ.3 லட்சம் வரை தடையின்றி வழங்க வேண்டும், அரசு விவசாய நிலங்களுக்கு கோடை உழவு செய்து தரவேண்டும், 2021- ஆம் ஆண்டு பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நல்லையா, உறுப்பினர்கள் வேலுச்சாமி சந்திரபோஸ் சீனிவாசன், குருசாமி, கட்டுமான பொருளாளர் சேது உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்