தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-07-20 19:54 GMT

தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பாக, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் விசுவநாதன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குரிய மாத வாரியான தண்ணீரை உடனடியாக கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பூதலூர் ஒன்றிய அமைப்பாளர் மா.லோகநாதன், ஒன்றிய துணை அமைப்பாளர் மருதுபாண்டியன், ஒன்றிய மகளிரணி தலைவி விஜயலெட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்