கோவில்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் நாராயணசாமி தலைமையில் மாநில பொருளாளர் சுப்புராஜ், மாவட்ட தலைவர் வெள்ளத்துரை, விளாத்திகுளம் வட்டார தலைவர் கோபாலகிருஷ்ணசாமி மற்றும் விவசாயிகள், தாங்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்கள் காணாமல் போவதை கண்டித்து நேற்று காலையில் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொடர்ந்து அவர்கள் உதவி கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஒரு வேப்ப மரத்தில் தங்களது மனுவை கட்டி வைத்துவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.