விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இழப்பீடு வழங்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-13 22:30 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே சரளபதி கிராமத்தில் விளைநிலங்களுக்குள் மக்னா யானை புகுந்து, பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, நஷ்டம் அடைந்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று தென்னை விவசாய சங்கம் சார்பில், மக்னா யானையை பிடிக்க கோரி வேட்டைக்காரன்புதூர் பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மக்னா யானை பயிர்களை சேதப்படுத்தியதால், நஷ்டம் அடைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். காளியம்மன் கோவில் பகுதியில் யானை அடிக்கடி உலா வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியே வர முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, பயிர்களை சேதப்படுத்தி வரும் மக்னா யாைனயை பிடித்து வேறு வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட வேண்டும் என கோஷம் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்