உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி திருவாரூரில் சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-09 17:54 GMT

உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி திருவாரூரில் சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விலை நிர்ணயம்

உரித்த தேங்காய்கள் கிலோ ரூ.50, கொப்பரை தேங்காய் கிலோ ரூ.150 என விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும். சமையல் எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும். தேங்காய் எண்ணெய்யை பொது விநியோக அங்காடிகளில் மானியத்தில் விற்பனை செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய்யை சத்துணவு கூடங்களில் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். தென்னை வளர்ச்சி வாரியத்தின் மானியம் மற்றும் திட்டங்களை அனைத்து பகுதிக்கும் விரிவுப்படுத்தி செயல்படுத்த வேண்டும்.

ஊர்வலம்

தென்னை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாநிலம் முழுவதும் தேங்காய் உடைப்பு போராட்டம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக திருவாரூரிலும் போராட்டம் நடந்தது.

இதை முன்னிட்டு திருவாரூர் பழைய ரெயில் நிலையத்தில் இருந்து சங்கத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி, பழைய பஸ் நிலையம் வழியாக புதிய ரெயில் நிலையத்தை அடைந்தனர். அங்கு நடைபெற்ற போராட்டத்துக்கு மாநில தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாநில செயலாளர் மாசிலாமணி ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் கருணாநிதி, நிர்வாகி ரெங்கராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகள் சங்கத்தினர் ேதங்காய்களை சாலையில் உடைத்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்