விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

தேனியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-06-02 17:53 GMT


புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராட்டம் நடத்திய தலைவர்களில் ஒருவரான ராஜேஷ் திக்காயிட், பெங்களூருவில் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து தேனி பழைய பஸ் நிலையம் முன்பு, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்.யு.சி.ஐ. விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுருளியாண்டவர் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன், மாவட்ட செயலாளர் கண்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் காசிவிஸ்வநாதன், ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் லெனின் உள்பட பலர் கலந்துகொண்டு பேசினர். இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்