விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-07-25 19:44 GMT

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் கடை வீதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறுவை பயிரை காப்பாற்ற காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டி உரிய நீரை பெற்றுக்கொடுக்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிப்பதை கைவிட வேண்டும். கோர்ட்டு தீர்ப்புகளின் படி உரிய நீரை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் உத்திராபதி, மாவட்ட செயலாளர் மணிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், விவசாய சங்க மாவட்ட தலைவர் செந்தில்வேல், ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் தியாகராஜன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பத்மாவதி, மாவட்ட துணை தலைவர் தங்கராசு, ஒன்றிய செயலாளர் சிலம்பரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்தும், மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்