விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க விருதுநகர் மாவட்ட கிளையினர் மாவட்ட செயலாளர் அமரேசன் தலைமையில் சூலக்கரை மேட்டில் 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று தொடங்கினர். மத்திய அரசு எம். எஸ். சாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைப்படி அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்தி செலவுடன் 50 சதவீதம் சேர்த்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விவசாயிகள் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு தெலுங்கானா, ஓடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ளதை போல ஆண்டுதோறும் ஏக்கருக்கு ரூ. 10 ஆயிரம் உழவு மானியம் வழங்க வேண்டும். விவசாயிகளின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.