கலெக்டரிடம் விவசாயிகள் மனு
கோரிக்ககைகளை வலியுறுத்தி விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா பிள்ளையார்குளம் கிராமம் வேப்பங்குளம் கண்மாயில் விவசாயம் செய்து வரும் விவசாயிகள் தங்கள் நிலங்களை வருவாய்துறை மற்றும் பத்திரப்பதிவு துறையின் மூலம் பட்டா மற்றும் பத்திரங்கள் பதிவு செய்ததன் மூலமாக அனுபவித்து வருகிறோம். இந்த நிலங்களின் பத்திரப்பதிவுக்கு தடை செய்தால் கூட்டுறவு வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து விவசாயக்கடன் பெறுவதில் தடங்கல் ஏற்படும். எனவே நிலத்தின் பத்திரப்பதிவிற்கான தடையை நீக்குமாறு கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.