விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது மாவட்டத்தில் திருச்சுழி தாலுகாவில் அகத்தாகுளம், வடக்கு காரியங்குளம், தெற்கு காரியங்குளம், நத்தகுளம், குழவி குளம், கடையநேந்தல், மீனாட்சிபுரம், கள்ளத்திகுளம், முத்தனேரி, நல்லதரை, குருந்தங்குளம் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை உணவுப் பூங்கா அமைக்க கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பாரம்பரியமாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன், மாவட்ட நிர்வாகிகள் விஜய முருகன், மனோஜ் குமார் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். போராட்ட முடிவில் கலெக்டரிடம் கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டது.