20 கிராமங்களில் விவசாயிகள் நல்ஏர் உழவு

20 கிராமங்களில் விவசாயிகள் நல்ஏர் உழவு நடந்தது.

Update: 2023-04-23 21:51 GMT

கல்லக்குடி:

புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள புள்ளம்பாடி, மேலரசூர் உள்ளிட்ட சுமார் 20 கிராமங்களில் விவசாயிகள் நல்ஏர் உழவு செய்யும் நாள் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி நேற்று காலை விவசாயிகள் கிராமத்தின் பொது நிலத்தில் கூடி, விவசாயம் செய்து நல்ல மகசூல் பெற்றதற்கு நில மகளுக்கு நன்றி கூறியும், வரும் நாட்களில் போதிய அளவு மழை பொழிய வருணபகவானை வேண்டியும் விவசாயிகள் நிலத்தில் ஏர் உழவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்பு கிராமத்தில் உழவு மாடுகள் வைத்திருக்கும் விவசாயிகள் தங்களின் மாடு மற்றும் ஏர்கலப்பைகளுடன் ஏர் உழவுக்கு வருவார்கள். ஆனால் தற்போது உழவு மாடுகள் குறைந்து போனதால் கிராமத்தில் உள்ள டிராக்டரை கொண்டு உழவு செய்து சாமி கும்பிடும் நடைமுறை உள்ளது. இருப்பினும் ஒரு சிலர் உழவுமாடுகள், ஏர்கலப்பையுடன் சாமி கும்பிட வந்தனர். நிகழ்ச்சியில் கிராம காரியஸ்தர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள், திரளாக கலந்து கொண்டு பூஜைகள் செய்து நிலத்தை உழவு செய்து வழிபட்டனர். இதைத்தொடர்ந்து அவரவர் நிலங்களுக்கு சென்று உழவு செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்