ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும்

ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் தொடர்ந்து பயனடைய விவசாயிகள் பதிவை புதுப்பிக்க வேண்டும் என வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-24 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் சீ. நாகராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வங்கிக் கணக்கில் பெற்று வரும் விவசாயிகள், உடனடியாக தங்களது பதிவுகளை புதுப்பிக்க வேண்டும்.. தங்கள் பதிவினை புதுப்பித்தல் மூலம் தாங்கள் தொடர்ந்து இந்த நிதியை பெற இயலும். புதுப்பிக்க தவறியவர்களுக்கு நிதி வழங்குவது நிறுத்தி வைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, விவசாயிகள் பதிவினை புதுப்பிக்க ஆதார் எண், ஏற்கனவே பதிவு செய்த மொபைல் எண், எடுத்துச் சென்று பொது சேவை மையங்கள் அல்லது அருகில் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் இ.கே.ஒய்.சி மூலம் பதுப்பித்துக் கொள்ளலாம். தற்போது அனைத்து தவணைகளுக்கும் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். இதுவரை இணைக்காதவர்கள், தற்போது தங்கள் வங்கிக் கிளைக்கு சென்று இணைத்துக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு தங்கள் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தினை தொடர்பு கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்