பாண்டவன் சேத்தி வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி

திருநகரி பாண்டவன் சேத்தி வாய்க்கால் தூர்வாரப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-05 16:52 GMT

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரி கிராமத்தில் பாண்டவன் சேத்தி வாய்க்கால் செல்லுகிறது. இந்த வாய்க்காலில் பல இடங்களில் புதர்கள் மண்டி தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருந்தது. தற்போது தமிழக அரசின் சார்பில் இந்த வாய்க்கால் தூர்வாரும் பணி நடந்து வருகிறது. 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்படும் இந்த வாய்க்காலின் மூலம் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வாய்க்கால் தூர்வாரப்பட்டுள்ளதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்