விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்

கள்ளிமந்தையம் அருகே விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-07-07 19:45 GMT

கள்ளிமந்தையம் அருகே உள்ள தும்பிச்சிபாளையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விவசாயிகள் அரை நிர்வாண போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமை தாங்கி பேசினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் கோபால்சாமி, குமார், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து பேசினா். மாநில சட்ட விழிப்புணர்வு செயலாளர் சதீஷ்குமார், திருப்பூர் மாவட்ட அமைப்புச் செயலாளர் பாலு, திருப்பூர் அவைத்தலைவர் லிங்குசாமி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். ேபாராட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் மேல் சட்டை அணியாமல் வேட்டி மட்டும் அணிந்திருந்தனர்.

போராட்டத்தின்போது, கண்வலி கிழங்கு விதைக்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3 ஆயிரம் குறைந்த பட்ச ஆதார விலையாக அரசு நிர்ணயம் செய்து அறிவிக்கவேண்டும். தென்னை, பனையில் இருந்து கள் இறக்கி விற்க அரசு அனுமதிக்கவேண்டும். தேங்காய், கடலை, நல்லெண்ணெய் உள்ளிட்ட எண்ணைய் வகைகளை விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக கொள்முதல் செய்து மானிய விலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யவேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை அனைத்து வேளாண் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்