விவசாயிகள் குறை தீர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்வு கூட்டம் இன்று நடக்கிறது.
திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கில் நடக்கிறது. இதில் மாவட்ட அலுவலர்களிடம், விவசாயிகள் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதே சமயம் விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று மனுதாரருக்கு உடனடியாக ஒப்புகைச்சீட்டும் வழங்கப்படும். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.