கலெக்டர் அலுவலகத்தில்விவசாயிகள் குறைகேட்பு கூட்டம்நாளை நடக்கிறது

கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை நடக்கிறது.

Update: 2023-04-19 18:45 GMT

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாதந்தோறும் 3-வது அல்லது கடைசி வெள்ளிக்கிழமையில் விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டுக்கான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஏப்ரல் மாதத்திற்கான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்டரங்கில் காலை 10.30 மணி முதல் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கி, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்களது சிட்டா, அடங்கல், கிசான் கடன் அட்டையுடன் காலை 8 மணி முதல் 10.05 மணிக்குள் தங்களுடைய பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்து கொள்ள வேண்டும். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் மூலம் உரிய பதில்அளிக்கவும், தொடர் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டரால் அறிவுறுத்தப்படும். எனவே விவசாயிகள் இந்த கூட்டத்தை பயன்படுத்தி பயன்பெறலாம். மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்