விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
விருதுநகர் கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நாளை (வியாழக்கிழமை) காலை 10.30 மணிக்கு கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவித்து பயன்பெறலாம். கூட்டத்தில் கலந்து கொள்ளும் விவசாயிகளும், அரசு அலுவலர்களும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி பயன்படுத்தியும், தடுப்பூசி போட்டுக்கொண்டும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.