விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 18-ந் தேதி நடக்கிறது
விழுப்புரம்
விழுப்புரம் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 18-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10.30 மணியளவில் விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். எனவே இக்கூட்டத்தில் விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர், கண்டாச்சிபுரம் ஆகிய தாலுகாக்களுக்குட்பட்ட அனைத்து விவசாய பிரதிநிதிகளும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.