தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கலசபாக்கத்தில் தரையில் நெல்லை கொட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2023-05-20 15:44 GMT

கலசபாக்கம்

கலசப்பாக்கம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி விழா நடைபெற்றது. சப்-கலெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கி விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கலசபாக்கம் தாலுகா அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல் மூட்டைகளை கொண்டு வந்து தரையில் நெல்லை கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலசபாக்கம் பகுதியில் தற்போது நெல் அறுவடை செய்யப்பட்டு வருவதற்கு கொள்முதல் செய்ய போதுமான அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாதால் விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போது எலத்தூர், கேட்டவரம்பாளையம் ஆகிய 2 கொள்முதல் நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் கூடுதலாக ஆங்காங்கே கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட்டு விவசாயிகளுக்கு உதவி செய்திட வேண்டும் என்ற கோரிக்கையில் வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

---

Tags:    

மேலும் செய்திகள்