கம்புகளால் பாலம் அமைத்து நீர்நிலையை கடக்கும் விவசாயிகள்

கம்புகளால் பாலம் அமைத்து நீர்நிலையை கடக்கும் விவசாயிகள்

Update: 2022-08-17 16:07 GMT

நயினார்கோவில், ஆக.18-

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் சதுர்வேத மங்கலம் கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு பிரதான தொழில் விவசாயமாகும். இவர்கள் கடலை, எள், மிளகாய், நெல் மற்றும் பயறு வகைகள் பயிரிட்டு வருகின்றனர்.

கண்மாய் பகுதியை தாண்டிச்சென்று சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிலான புஞ்சை பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் கண்மாயின் ஒரு பகுதியில் நீர்வரத்து அதிகம் உள்ள காலங்களில பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. தற்போது வைகை ஆற்று நீரானது கால்வாய் வழியாக கண்மாய்க்கு அதிக அளவில் வருவதால், கண்மாயை தாண்டிச்செல்ல முடியாமல் விவசாயிகள் தவித்தனர். இந்தநிலையில் மரக்கட்டைகளை கொண்டு கால்வாயின் குறுக்கே பாலம் அமைத்து கடந்து சென்று வருகிறார்கள். இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறும்போது, "எங்கள் கிராமத்தில் உள்ள கண்மாய் கரையையும், உள்புறம் உள்ள மேடான பகுதியையும் இணைத்து பாலம் அமைத்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இங்கு பாலம் அமைத்து தரவில்லையெனில் கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருப்போம்" என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்