விவசாயிகள் விளை பொருட்களை இ-நாம் செயலி மூலம் விற்பனை செய்யலாம்

விவசாயிகள் விளை பொருட்களை இ-நாம் செயலி மூலம் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-08-24 18:37 GMT

அரியலூர் மாவட்டத்தில், ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும், பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடமும் தற்போது மின்னணு தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் விவசாயிகள் பயனடையும் வகையில் இணைக்கப்பட்டு உள்ளன. இத்திட்டத்தில் விவசாயிகள் தங்களுடைய வேளாண் விளைபொருட்களை இ-நாம் (eNAM App) செயலி மூலம் மறைமுக ஏலமுறையில் உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் உள்ள வெளிமாநில வியாபாரிகளும் கலந்து கொள்வதால் விவசாயிகள் தங்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்களை சரியான எடையில், தரகு, கமிஷன் இன்றி நல்லவிலைக்கு விற்று பயன் பெறலாம். மேலும், புதிதாக தொடங்கப்பட்டுள்ள பண்ணைவாயில் முறையில் விவசாயிகள் தங்களது வேளாண் விளைபொருட்களை விளை நிலத்திலேயே செல்போன் மூலம் இ-நாம் செயலி வாயிலாக விற்று பயன்பெறும் வசதி உள்ளது. எனவே அரியலூர் மாவட்ட விவசாயிகள் தங்களுடைய முழு விவரங்களை ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும், மேலும் விவரங்களுக்கு விற்பனைக்கூட பொறுப்பாளரை 9655180343 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்