குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்து பயன்பெறலாம்

கள்ளக்குறிச்சியில் நாளை மறுநாள் நடைபெறும் குறைதீர்ப்பு கூட்டத்தில் விவசாயிகள் மனு கொடுத்து பயன்பெறலாம் கலெக்டர் ஷ்ரவன்குமார் தகவல்

Update: 2023-02-20 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை மறுநாள்(வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறையிலான தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர்.

எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்