தேசிய மூங்கில் இயக்க திட்டத்தின் கீழ் பயனடைய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
தேசிய மூங்கில் இயக்க திட்டத்தின் கீழ் பயனடைய விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மூங்கில் இயக்க திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2023-24-ம் நிதியாண்டில் பொது நிலம் கொண்ட ஊராட்சி (அல்லது) பஞ்சாயத்து வாரியம், அரசு பள்ளிகள், கல்லூரிகள், அரசு மாணவ-மாணவியர் விடுதிகள் போன்ற இடங்களில் மூங்கில் கன்றுகளை நடவு செய்வதற்காக பொருள் இலக்கீடு 12 எக்டரும் மற்றும் நிதி இலக்கீடு ரூ.6 லட்சமும் பெறப்பட்டுள்ளது. அதேபோல் தனிநபர் நடவு செய்வதற்காக பொருள் இலக்கீடு 5 எக்டரும் மற்றும் நிதி இலக்கீடு ரூ.1¼ லட்சமும் பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைந்து பலன்பெறுமாறு அனைத்து விவசாயிகள் மற்றும் ஊராட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் மற்றும் ஊராட்சி தலைவர்கள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியோ அல்லது https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறலாம் என மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.