கலெக்டர் அலுவலகத்துக்கு தக்காளி பழக்கூடைகளுடன் வந்த விவசாயிகள்
கலெக்டர் அலுவலகத்துக்கு தக்காளி பழக்கூடைகளுடன் வந்த விவசாயிகள்: உரியவிலை கிடைக்க கோரி நூதன போராட்டம்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் தக்காளி பழங்கள் அடங்கிய கூடைகளுடன் மனு அளிக்க வந்தனர்.
அப்போது தக்காளிக்கு உரிய விலை கிடைப்பதில்லை என்று கூறி ஒரு கிலோ தக்காளியை 5 ரூபாய்க்கு பொதுமக்களிடம் விற்பனை செய்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இதன் மூலம் வசூலாகும் தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்புவதாகக் கூறினர்.