பிரதமரின் கவுரவத்தொகை திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்க வேண்டும்

பிரதமரின் கவுரவத்தொகை திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-25 10:32 GMT

தென்திருப்பேரை:

பிரதமரின் கவுரவத்தொகை திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது ஆதார் எண்ணை இணையதளத்தில் இணைக்க வேண்டும் என்று வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆழ்வார்திருநகரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அல்லிராணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கவுரவத்தொகை திட்டம்

பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவத் தொகை வழங்கும் திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் விவசாய குடும்பத்திற்கு 3 தவணையாக தலா ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு ஏற்கனவே 11 தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. அடுத்த 12-வது தவணைத் தொகையை தொடர்ந்து பெற வேண்டுமானால் விவசாயிகள் சுய விவரங்களை, அதாவது ஆதார் எண், வங்கி கணக்கு எண், மொபைல் எண் ஆகியவற்றை அருகில் உள்ள இ-சேவை மையங்களுக்கு சென்று உரிய இணையதளத்தில் வருகிற 31-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும்.

நிலஆவணங்கள்

மேலும் பதிவு செய்த தகுதியான விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை ஆகஸ்டு 31-ந் தேதிக்குள் சரிபார்ப்புச் செய்தால் மட்டுமே 12-வது தவணைத் தொகை கிடைக்கப்ப பெறும் என மத்திய அரசுஅறிவித்துள்ளது. விவசாயிகள் தங்களது நில ஆவணங்களை வட்டார வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்ட கலைத்துறை, வேளாண் வணிகத்துறை அலுவலகங்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு நேரில் தங்களது நில ஆவணங்களை உடனடியாக சமா்ப்பிப்பதன் மூலம் இத்திட்டத்தின் கீழ் தொடர்ந்து பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்