விவசாய சங்கத்தினர் டிராக்டருடன் ஊர்வலம்

விவசாய சங்கத்தினர் டிராக்டருடன் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2023-01-26 19:51 GMT

மலைக்கோட்டை:

ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் நேற்று மாலை திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து காந்தி மார்க்கெட் வரை டிராக்டருடன் ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்துக்கு ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் டிராக்டருடன் கலந்து கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்றனர்.

இதில் விவசாயத்திற்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்ட உத்தரவாதம் செய்ய வேண்டும். முழுமையான கடன் நிவாரணம் கொடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தையொட்டி நேற்று மாலை அந்த பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. கோட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்