4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

பொறையாறு அருகே 4 வழிச்சாலை பணியை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டம் நடந்தது

Update: 2022-12-21 18:45 GMT

பொறையாறு:

விழுப்புரம் முதல் நாகை வரையிலான 4 வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பொறையாறு அருகே பூந்தாழை கிராமத்தில் வடிகால் வாய்க்காலை மூடி மறைத்து 4 வழிச்சாலை பணியை மேற்கொள்ள முயன்றதை தடுத்து நிறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த பொறையாறு போலீசார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்