கால்வாய்களில் தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு பெரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய்களில் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்ட பாசனத்திற்கு பெரியாற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய்களில் வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கால்வாய்
சிவகங்கை மாவட்டத்தில் பெரியாற்று தண்ணீர் மூலம் சீல்டு கால்வாய், 48-வது மடை கால்வாய் மற்றும் கட்டாணிபட்டி 1-வது கால்வாய் மற்றும் 20-வது கால்வாய், லெஸ்சீஸ் கால்வாய் ஆகிய 5 கால்வாய் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 129 கண்மாய் நிரம்பி 6,039 ஏக்கர் நிலங்கள் பயன் அடையும்.
இந்தமுறை திறக்கப்பட்ட தண்ணீர் தற்போது லெஸ்சீஸ் கால்வாய் ்தவிர மற்றும் 4 கால்வாய்களில் தண்ணீர் வர தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நன்றி
இதுதொடர்பாக சிவகங்கை மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது.:-
தமிழக வரலாற்றில் முதல்முறையாக குறிச்சி கண்மாயை 60 மணி நேரத்தில் நிரப்பி கொடுத்தும், சிவகங்கை மாவட்ட பிரதான ஐந்து கால்வாய்களுக்கு தண்ணீர் திறந்தும் இந்தாண்டு விவசாயம் செழிக்க விவசாயிகள் பயன்பெறும் வகையில் நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். மேலும் அமைச்சர் துரைமுருகன், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், பொதுப்பணித்துறை அலுவலர் ஆகியோருக்கு சிவகங்கை மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றி கூறுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.