கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்

கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.

Update: 2023-08-03 19:49 GMT

மலைக்கோட்டை:

விவசாயிகளின் விளை பொருட்களுக்கு இரட்டிப்பு லாபம் வழங்கப்படும் என்ற மத்திய பா.ஜ.க. அரசின் தேர்தல் கால வாக்குறுதி மற்றும் நெல், கரும்பு ஆகியவற்றின் ஆதார விலையை உயர்த்தி தரப்படும் என்ற மாநில அரசின் வாக்குறுதி ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் 7-வது நாளான நேற்று ஒரு பெண்ணை கழுத்தில் தூக்குக்கயிறு கட்டியவாறு அமரவைத்து, ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு, தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் 15 நாட்கள் மட்டுமே இப்போராட்டத்தை நடத்த காவல்துறை அனுமதி வழங்கி உள்ளது. மேலும் தினமும் 25 பேர் மட்டுமே போராட்டத்தில் பங்கெடுக்க வேண்டும் என்று போலீசார் நிபந்தனை விதித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்