விஷம் குடித்து விவசாயி தற்கொலை
நத்தம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
நத்தம் அருகே சிறுகுடி தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் ராசு (வயது 52). விவசாயி. கடந்த சில நாட்களாக இவர், வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த ராசு, நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.