விவசாயி தற்கொலை

விஷத்தை தின்று விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-07 19:36 GMT

சங்ககிரி:

சங்ககிரி அருகே மாவெலி பாளையம் புளியமரத்து காடு பகுதி சேர்ந்தவர் நடேசன் (வயது 68), விவசாயி. இவர், ஏற்கனவே தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த சில நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த நடேசன் வீட்டில் இருந்த விஷ மருந்தை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சங்ககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்