விவசாயி தற்கொலை

கொல்லிமலையில் விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-15 18:45 GMT

சேந்தமங்கலம்

கொல்லிமலை ஒன்றியம் சேலூர் நாடு ஊராட்சியில் உள்ள வீரகனூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவசக்தி (வயது 27). விவசாயி. இவருக்கும் இவரது மனைவிக்கும் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனையில் இருந்த அவர், கடந்த 12-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சிவசக்தி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்