விவசாயி தற்கொலை

ஓமலூர் அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-06-08 19:32 GMT

ஓமலூர்:

ஓமலூரை அடுத்த டேனிஷ்பேட்டை ஊராட்சி லோக்கூர் வனப்பகுதியில் ரெயில்வே பாலம் அருகே ஆண் பிணம் தூக்கில் தொங்கியது. தீவட்டிபட்டி போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். விசாரணையில், பிணமாக தொங்கியது காமலாபுரம் காட்டூர் பகுதியை சேர்ந்த விவசாயி அம்மாசி (வயது 50) என்பதும், அவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அம்மாசி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணைநடத்தினர்.

 

Tags:    

மேலும் செய்திகள்