வேன் மோதி விவசாயி பலி

அருப்புக்கோட்டை அருகே லோடு வேன் மோதி விவசாயி பலியானார். அந்த வேன் ஆட்டோ மீதும் மோதியது.

Update: 2023-01-04 19:02 GMT

அருப்புக்கோட்டை,


அருப்புக்கோட்டை அருகே லோடு வேன் மோதி விவசாயி பலியானார். அந்த வேன் ஆட்டோ மீதும் மோதியது.

விவசாயி பலி

அருப்புக்கோட்டை அருகே ராமநாயக்கன்பட்டி தெற்குதெருவை சேர்ந்தவர் சின்னழகு (வயது 75). விவசாயியான இவர் தனது காட்டில் பருத்தியை எடுத்து விட்டு அதை பந்தல்குடி கொண்டு செல்வதற்காக ராமநாயக்கன்பட்டி விலக்கு அருகே பஸ் நிறுத்தத்திற்கு பருத்தி மூட்டையுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பரமக்குடியில் இருந்து எப்போதும் வென்றான் நோக்கி குளிர்பானம் ஏற்றி சென்ற லோடு வேன், சின்னழகு மீது மோதியது.

இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆட்டோ மீது மோதியது

விவசாயி மீது மோதிய அந்த லோடு வேன், முன்னால் சென்ற ஆட்டோவின் மீது மோதியது. இதில் அந்த ஆட்டோவும் சேதமானது. விபத்து ஏற்படுத்திய லோடு வேன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பந்தல்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னழகு உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்