விவசாயி வேன் மோதி பலி

நாமகிரிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி வேன் மோதி பரிதாபமாக இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2023-08-26 18:45 GMT

நாமகிரிப்பேட்டை

விவசாயி பலி

நாமகிரிப்பேட்டை அருகே உள்ள கொங்கலம்மன் நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (வயது 38). விவசாயி. இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிகளுக்கு 3 வயதில் மகள் உள்ளாள். இந்தநிலையில் சதீஷ் தனது மோட்டார் சைக்கிளில் நாமகிரிப்பேட்டையில் இருந்து நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திருச்செங்கோட்டில் இருந்து ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்த வேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சதீஷ் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் நாமகிரிப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

டிரைவர் கைது

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நாமகிரிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் போலீசார் சதீஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த சதீஷின் உடலை பார்த்து அவரது மனைவி, குழந்தை மற்றும் உறவினர்கள் பார்த்து கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க செய்தது. இதைத்தொடர்ந்து போலீசார் விபத்தை ஏற்படுத்திய வேன் டிரைவர் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த பழனிசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் விவசாயி இறந்த சம்பவம் நாமகிரிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்