சாலை விபத்தில் விவசாயி பலி
கருவேப்பிலங்குறிச்சி அருகே சாலை விபத்தில் விவசாயி பலி
கருவேப்பிலங்குறிச்சி
கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள காவனூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 45), விவசாயி. இவர் நேற்று காலை தனது உறவினர் கலியபெருமாள் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் காவனூரில் இருந்து திட்டக்குடி நோக்கி புறப்பட்டார். சத்தியவாடி கிராமம் அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர புளிய மரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் படுகாயமடைந்த கலியபெருமாள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.