மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலியானார்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஏலாக்குறிச்சி கிராமத்தை சேர்த்தவர் ராஜேந்திரன். இவர் வீட்டில் இருந்த மாடுகளை பிடித்து கட்டிக்கொண்டு இருக்கும்போது ஒரு கன்றுக்குட்டி மட்டும் சாலையோரம் ஓடி உள்ளது. அதனைப் பிடிக்க சாலைக்கு சென்றபோது அவர் மீது குருவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ்(35) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.